முன்னாள் இராணுவ தளபதியின் சேவையை புதிய இராணுவ தளபதி பாராட்டு

18th August 2017

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை பிரதான பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி தனது பதவியிலிருக்கும் காலங்களில் அவர் செய்த நல்ல வேலைத் திட்டங்களை பாராட்டியும் எதிர்காலத்தில் அதைபோன்று தொடர்ச்சியான திட்டங்களுக்கு தங்களது ஆதரவை பெற்றுத்தருமாறு இராணுவ தளபதியினால் கோரப்பட்டது.

தற்பொழுது இராணுவத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அமைப்பு மற்றும் தேசிய கட்டிய வேலைகளுக்கு முக்கியதுவம் வாய்ந்த பொது விடயங்களில் இராணுவம் கவனம் செலுத்துகின்றது.

இந்த சந்திப்பின்போது இரு தளபதிகளுக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது. பின்பு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியினால் தனது வருகையையிட்டு பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது. பின்பு பாதுகாப்பு பிரதானி குழுபுகைப்படத்திலும் இணைந்தார். இந்த நிகழ்வின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

|