இந்திய இராணுவ தெற்கு தளபதி இந்திய அமைதி காக்கும் படையினர்களின் நினைவு துாபிக்கு அஞ்சலி
18th August 2017
இந்தியா இராணுவத்தின் தெற்கு பிராந்தியத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ் எம் விஎஸ்எம் ஏடீசி உட்பட் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரகள் வியாழக் கிழமை (17)ஆம் திகதி பத்தரமுல்லை இந்திய அமைதி காக்கும் படையினர் 80 பேர் எல்டிடிஈ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானவர்களின் நிமித்தம் அமைக்கப்பட்டுள்ள நினைவு துாபிக்கு அங்சலியை செலுத்தினர்.
இராணுவ ஆளணி நிர்வாக பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களினால் இந்த நினைவு துாபிக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த இந்திய இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை வரவேற்றார். பின்பு இலங்கை இராணுவ பொலிஸ் படையினரால் இந்த நிகழ்வின் அஞ்சலி மரியாதை கடமைகள் இடம்பெற்றன.
இலங்கை இராணுவ பொலிஸ் படையினரின் இராணுவ மரியாதையுடன் இந்திய தென் பிராந்திய தளபதி 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1989ஆம் ஆண்டு வரை அமைதி காக்கும் கடமைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவ படைவீரர்களின் நினைவு துாபிக்கு மலர்மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
|