பராஒலிம்பிக் மெய்வல்லுனர் போட்டி மற்றும் ஜப்பான் நிர்மான கண்காட்சியில் கலந்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீரர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு
17th August 2017
லண்டனில் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான பராஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்ற 3ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத் , ஜப்பான் டோகியோ தலைநகரில் இடம்பெற்ற நிர்மான கண்காட்சியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்ற 2ஆவது இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த கோப்ரல் டீ.எம்.சி திசாநாயக கடந்த (17)ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
இராணுவ தளபதி இவர்களது திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இவர்கள் இருவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். இச் சந்தர்ப்பத்தின் போது இராணுவ தளபதியுடன் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து,இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா,இராணுவ விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் அநுர சுதசிங்க, 522ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அதீப திலகரத்ன மற்றும் 2ஆவது (தொண்டர்) இராணுவ புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி இணைந்திருந்தனர்.
லண்டனில் 2017ஆம் ஆண்டிற்காக இடம்பெற்ற பராஒலிம்பிக் மெய்வல்லுனர் ஆண்களுக்கான ஈட்டியெறியும் போட்டியில் பங்குபற்றிய 3ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சார்ஜன்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். மேலும் ஜப்பான் டோக்கியோ தலைநகரத்தில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை இடம்பெற்ற ‘ஜப்பான் வடிவமைப்பு நிர்மான கண்காட்சியில் இலங்கை இராணுவத்திலிருந்து இயற்கை அனர்த்தங்களின் போது தற்காப்பு பாதுகாப்பு வலயமைப்பு என்ற செயற்பாட்டின் ஆக்கமைப்பிற்கு கோப்ரல் டீ.எம்.சி திசாநாயக்கவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கப்பெற்றது.
|