உயிர் நீத்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கான நினைவு தினம் அனுஷ்டிப்பு

17th August 2017

உயிர் நீத்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கான நினைவு தினம் கடந்த செவ்வாய்க் கிழமை (15) யாழ்ப்பாண பலாலி பிரசேத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் இவர்கள் 1987ஆம் ஒக்டோபர் 12ஆம் திகதி பவண் எனும் அமைதிகாக்கும் நடவடிக்கையின் போது ஹெலிகொப்டர் மூலம் தரையிரங்கிய வேளை எல் ரி ரீ ஈ படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குள்ளாகி உயிர் நீத்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13ஆவது சீக்கிய காலாட் படையைச் சேர்ந்த சுமார் 10 பேர் கொண்ட கொமாண்டோ படையினராவர்.

இந் நிகழ்வில் இந்திய துாதரக ஜெனரல் திரு ஸ்ரீ ஏ நடராஜன் ,யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகப் பிரதானி பிரிகேடியர் ஏ டீ அலவத்த அவர்கள் மற்றும் மேலும் பல இராணுவ உயர் அதிகாரிகள் உயிர் நீத்த இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தினர்.

|