மடுமாதா ஆலயத்திற்கு ஒத்துழைப்பு வழக்கிய படையினர்

15th August 2017

மன்னார் மடுமாதா ஆலய திருச் சொருப பவனி கடந்த சின தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக நிகழ்த்தப்படாமல் இப் பிரதேசம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி காணப்பட்டது. எனவே இந் நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவப் படையினர் சிரமத்தைப் பாராது தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.

அந்த வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 613 படைப் பிரிவின் இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த 100 இராணுவ படை வீரர்கள் இவ் அனர்த்த பணிகளை கடந்த திங்கட் கிழமை (14) மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மழைநீர் காரணமாக சேற்றில் புதைந்து காணப்பட்ட வாகனங்கள் அப்புரப்படுத்தல் மேலும் சேதமடைந்த கூடாரங்களை சரி செய்தல் அத்துடன் பாதிப்பிற்குள்ளான வீதிகளைச் சீர்செய்தல் போன்ற பணிகள் இப் படைணினரால் மேற்கொள்ளப்பட்டுது.

இவ் ஆலயத்தின் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகொளிற்கமைய 613ஆவது இராணுவ படை பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அஜந்த விஜேசூரிய அவர்களின் ஒத்துழைப்போடு இவ்வாறான மீட்டுப் பணிகள் இடம் பெற்றதுடன் மேலும் செவ்வாய்க் கிழமை (15) இடை விடாது இப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

|