இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை சந்தித்தார்

12th August 2017

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (10)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களை சந்தித்தார்.

முதலாவதாக ராஜகிரியவில் அமைந்துள்ள பிரதேச அபிவிருத்தி அமைச்சிற்கு வருகை தந்த இராணுவ தளபதியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் வரவேற்று இராணுவ தளபதிக்கு தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் இறுதியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்பு இராணுவ தளபதியினால் பிரதேச அபிவிருத்தி அமைச்சில் உள்ள பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையையிட்டு கையொப்பமிட்டார்.

பின்பு இராணுவ தளபதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை அவரது காரியாலயத்திற்கு சென்று உத்தியோகபூர்வமாக சந்திப்பை மேற்கொண்டார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதிக்கு இடையிலான இந்த சந்திப்பின் போது இராணுவத்திற்குரிய முக்கியமான விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.

ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவினால் இராணுவ தளபதிக்கு வாழத்துக்கள் தெரிவித்து இருவருக்கும் இடையில் நினைவு பரிசுகள் பரிமாரப்பட்டது.

|