இராணுவ வீரர்களுக்கு உளவியல் பயிற்சிப் பட்டறை

11th May 2023

இராணுவக் குழுவில் உள்ள இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் மன உறுதியையும் உளவியல் திறனையும் உயர்த்தும் முகமாக, விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இராணுவ விளையாட்டு பணிப்பகம், இராணுவ வளாகத்திலுள்ள இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் விளையாட்டு உளவியல் தொடர்பான பயிற்சிப் பட்டறையை வியாழன் (மே 4) நடாத்தியது.

இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானியும், இலங்கை இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்பட்ட இந்த உளவியல் பயிற்சியானது, கயிறு இழுக்கும் அணியைச் சேர்ந்த விளையாட்டு வீர / வீராங்கனைகள் மற்றும் இராணுவ தடகள குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இராணுவ தடகள குழுவின் செயலாளர் பிரிகேடியர் விஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, அவர்கள் உதவக்கூடிய செயலமர்வில் பங்கேற்குமாறு அந்த விளையாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்திருந்தார்.

உளவியல் தொடர்பான பயிற்சி பயிற்றுவிப்பாளரான இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கெப்டன் சமந்த ரூப அவர்களினால் முக்கியமான விரிவுரை வழங்கப்பட்டது.