காலம் சென்ற மேஜர் ஜெனரல் விமலரத்தின அவர்களின் 25ஆவதுநினைவு நாள் அனுஷ்டிப்பு

9th August 2017

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த மரணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின அவர்களது 25ஆவது நினைவு ஆண்டானது அனுராதபுர சாலியபுரவில் உள்ள கஜபா படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (06) இடம் பெற்றது.

இதன் போது பௌத்த மத அனுஷ்டானங்களுக்கமைவாக அஸ்கிரி விகாரையின் விகாராதிபதி வரகாகொடை ஞானரத்தின தேரர் அவர்களின் தலைமையில் மத வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அமுது வழங்கள் நிகழ்வும் இதனைத் தொடர்ந்து இடம் பெற்றது.

அதனைத் தொடந்து இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் காலம் சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின அவர்களது நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு காலம் சென்ற இராணுவ அதிகாரியின் மனைவியால் அண்னாரின் புகைப் படத்திற்கு மலர் மாலையும் இடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கஜபா படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வருகை தந்த இராணுவத் தளபதியவர்களால் இத் தலைமையகத்தின் வரவேற்பாளர் புத்தகத்தில் தமது கருத்தினையும் குறிப்பிட்டார்.

மேலும் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ இ மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின, ரியர் அத்மிரால் மொஹோன் ஜயமக, கேணல் எச் ஆர் ஸ்டீபன், கேணல் ஜி எச் ஆரியரத்தின, கேணல் வை என் பலிபான, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நலிந்த டி சில்வா, லெப்டினன்ட் கொமாண்டர் சி பீ விஜயபுர மற்றும் இராணுவ படைவீரர் டபிள்யூ டீ விக்கிரமசிங்க போன்ரோர் 1992ஆம் வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி யாழ்ப்பாணம் கைடிஸ் பிரதேசத்தின் அராலி குடுவையில் எல் ரீ ரீ ஈ யினரின் நிலக் கண்ணிவெடிக்ககு அகப்பட்டு மரணித்தனர்.

|