இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலைப் பிரதானி கடமைப் பொறுப்பேற்பு

5th August 2017

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் தமது கடமையினை கடந்த வெள்ளிக் கிழமை ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி பொறுப்பேற்றார்.

மேலும் ஓய்வு பெற்ற பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் ரேனக வி உடவத்த அவர்களின் பதவிக்கே இப் புதிய பதவிநிலைப் பிரதானியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இப் புதிய பதவிநிலைப் பிரதானியானவர் இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் தளபதியாகவும் முல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாகவூம் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கந்தானை டீ மஸ்கனட் கல்லுாரியில் மேற்படிப்பை மேற்கொண்ட இவர் தியத்தலாவை இராணுவ கற்கைப் பயிற்ச்சி தலைமையத்தில் 18ஆவது பிரிவின் கீழ் 1983ஆம் வருடம் ஏப்பிரல் மாதம் 27ஆம் திகதியன்று கெடெட் அதிகாரியாக இணைந்த இவர் தமது பயிற்சிக் கற்கையினை நிறைவூ செய்து இராணுவ கெமுனு ஹேவா நிரந்தரப் படையணியில் 2ஆவது லெப்டினன்ட் இராணுவ அதிகாரியாக 1984ஆம் வருடம் நொவெம்பர் மாதம் 07ஆம் திகதி சேவையாற்றினார்.

|