இலங்கை சமிக்ஞை படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு புதிய வீடு
13th November 2023
இலங்கை சமிக்ஞை படையணி இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் 1 வது இலங்கை சமிக்ஞை படையணியின் தகுதியான சாஜன் ஒருவருக்கு கம்பளை, அட்டபாகையில் ரூ 1.5 மி செலவில் புதிய வீட்டைக் கட்டியுள்ளது.
இராணுவ வீரர்களுக்கான வீடமைப்பின் எட்டாவது திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, சிரேஷ்ட சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி நடைமுறைப்படுத்தப்பட்டது.
1 வது இலங்கை சமிக்ஞை படையினரின் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறன்களுடன் 1 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.டி.கே டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (10) வீடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, நிகழ்வின் பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ்.ரத்நாயக்க அவர்களினால் வீட்டின் சாவிகள் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞை படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.கே.டி அதிகாரி யூஎஸ்பீ, இலங்கை சமிக்ஞை பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே.கே.டி ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ, சமிக்ஞை பாடசாலையின் தளபதி கேணல் எம்.ஏ.கே ஜயவர்தன பீஎஸ்சீ, 1 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.டி.கே டி சில்வா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையணியின் சாஜன் மேஜர் மற்றும் சிப்பாய்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர், அத்துடன் சம்பிரதாயத்திற்கு அமைய செத்பிரித் பாராயணங்கள்,பால்பொங்குதல், ரிப்பன் வெட்டுதல் போன்றன இடம்பெற்றன.
இத்திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவத்தினரின் செலவு பெரும் பங்கை வகிக்கின்றது. இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் நலன்புரி பணிப்பகத்தினர் வீடு கட்டும் திட்டத்தில் பங்களிப்பை வழங்கினர்.