2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு கொழும்பில்
2nd August 2017
இலங்கை இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு’ பூகோள மற்றும் வலய பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இந்த வருடம் இடம்பெறும். சில வருடங்களுக்கு முன்பாக கொடிய பயங்கரவாத அமைப்பை தோற்கடித்ததன் பின்பு ஏற்படும் தாக்கங்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பாக இந்த கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.
ஏழாவது தடவையாக இந்த கருத்தரங்கு ஆகஸ்ட் மாதம் 28 , 29 ஆம் திகதிகளில் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் 800 பேரின் பங்களிப்புடன் நடைபெறும். மேலும் இந்த கருத்தரங்கிற்கு சாக் நாடுகளின் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பிதல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது உலக குடியரசு தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு ஏற்படும் தீவிரவாத எச்சரிக்கைகள் காரணத்தினால் வன்முறை மற்றும் அடிப்படை கோட்பாட்டுடன் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் இந்த கருத்தரங்குகள் இடம்பெறும்.
உலகத்தில் குடியரசின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஏற்பட்டுள்ளது. மத,அரசியல் மற்றும் உளவியல் சார்ந்த காரணங்கள் பிரச்சினையாக அமைகிறது.
2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு உலகத்திலுள்ள பாதுகாப்பு பங்குதாரர்கள்,கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது.
பூகோள பாதுகாப்பிற்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பான விடயங்களை உலகலாவிய ரீதியாக அறிந்து கொள்வதற்காக பூகோள வலய குடியரசு நிபுணர்களின் பங்களிப்புடன் இம்முறை பாதுகாப்பு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருத்தரங்கில் தீவிரவாத வன்முறை செப்டம்பர் 11 தாக்குதலில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பூகோள வன்முறை தீவிரவாதம்,தீவிரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு செயற்பாடுகள்,கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு,பிராந்திய அமைப்புக்களின் பங்களிபபுகள்,உலகளாவிய ஆளுகையில் செல்வாக்கு,சட்ட பாதிப்புகள், நுண்ணறிவும் சைபர் சவால் மற்றும் வியூகம் ,பாதுகாப்பு படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள் ,ஐக்கிய நாடுகள் மூலோபாயம், உள் பாதுகாப்பு மூலோபாய ஆய்வுகள் மாநில உறவுகள் மற்றும் அதன் தீவிரவாத வன்முறை,உலக நிர்வாகத்தில் இராணுவ செயற்பாடுகள் எனும் தலைப்புகளில் இந்த்கருத்தரங்குகள் இடம்பெறும்.
இந்த பாதுகாப்பு கருத்தரங்குகள் இராணுவ பயிற்சி பணியகத்தின் ஒத்துழைப்புடன் இராணுவ தளபதியின் மேற்பார்வையில் இடம்பெறும். மேலும் உலகத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக கருத்தரங்கில் ஆராயப்படும்.
இக்கருத்தரங்கிற்கு உயர் ஸ்தானிகர்,உள்நாட்டு வெளிநாட்டு அரசியல்வாதிகள்,பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கலந்து கொள்வர்.
மேலும் கட்டுரைகள்
மேலும் வீடியோக்கள்
|