இராணுவ தளபதி இராணுவ உபகரணங்கள் மற்றும் சுகாதார கருவிகளை பார்வையிட்டார்

2nd August 2017

அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி நாட்டிற்கு செல்லும் எமது இராணுவத்தினர் பயண்படுத்தகூடிய உபகரணங்கள் மற்றும் சுகாதார கருவிகள் பனாகொடை இராணுவ குடியிருப்பு வளாகத்தினுள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதனை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் (31)ஆம் திகதி திங்கட் கிழமை பார்வையிட்டார்.

இந்த செயற்முறை,தொழில் நுட்ப ரீதியாக முன் பயண்படுத்தல் பார்வையிடல் மற்றும் மதிப்பீடு ஆலோசனை வருகைகள் என்று வரையறுக்கப்பட்டது. இதனை எமது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதியினால் (31)ஆம் திகதி இந்த உபகரணங்கள் மதீப்பீடு செய்யப்பட்டன.

இங்கு வருகை தந்த இராணுவ தளபதியை மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க,மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன பனாகொடை இராணுவ முகாம் நுழைவாயிலில் வைத்து வரவேற்றனர்.

இராணுவ தளபதிக்கு இராணுவ திட்டமிடல் பணிப்பாளர் பிரிகேடியர் டீ.டி கமகே இந்த உபகரணங்கள் தொடர்பான மதீப்பீடு விளக்கத்ததை விளக்கினார். அதனை தொடர்ந்து கேர்ணல் ஜயசிங்க ஆய்வு தளத்தில் உள்ள உபகரணங்கள் மற்றும் கருவிகள் தொடர்பான விளக்கத்தையும் இராணுவ தளபதி மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கினார்.

கம்பட் வாகனங்கள்,கண்ணிவெடி அகற்றும் மற்றும் வெடிக்கும் இராணுவ தளவாடங்களின் சாதனங்கள் மற்றும் போர் கருவி உபகரணங்கள் இராணுவ தளபதியின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டன.

நியூயோக் மற்றும் மாலி நாடுகளுக்கு எடுத்து செல்லும் உபகரணங்களை பார்வையிடுவதற்கு ஐக்கிய நாடு பிரதிநிதிகளின் வருகை விரைவில் இருப்பதன் நிமித்தம் இந்த மதீப்பீடு மற்றும் பரிசீலனைக்ள் இடம்பெற்றன. இந்த பரிசீலனையின் போது போர்கருவி மாஸ்டர் ஜெனரல் பிரதானி,சமிக்ஞை பிரதானி,பொறியியலாளர் பிரதானி,இராணுவ தலைமையக பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த அமைதி காக்கும் பணிகளுக்காக எடுத்து செல்லும் வைத்திய உபகரணங்கள்,அம்புலன்ஸ் வாகனங்களை நாராஹென்பிடயில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு சென்று இராணுவ தளபதியி பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது இராணுவ வைத்திய பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க ,பிரிகேடியர் கமல் சுமணபால இராணுவ தளபதியுடன் இந்த உபகரணங்களை சென்று பார்வையிட்டனர்.

|