இராணுவ தளபதி யக்கல ‘இராணுவ ரணவிரு எபரல்’ தொழிற்சாலைக்கு விஜயம்

1st August 2017

இராணுவ அங்கவீனமுற்ற பரடவீரர்களின் சேவை நிலையமான ‘ரணவிரு எபரல்’ தொழிற்சாலைக்கு (31)ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் விஜயத்தை மேற்கொண்டார்.

போர் தளபாட சேவை பணிப்பாளர் பிரிகேடியர் எச்.எம்.எல்.பீ ஹேரத் மற்றும் ரணவிரு எபரல் கட்டளை அதிகாரி இராணுவ மரியாதையுடன் இராணுவ தளபதியை வரவேற்றனர்.

இந்த தொழிற்சாலை வளாகத்தையும்,படை வீரர்களது தங்குமிட வசதிகளையும்,தயாரிப்பு கிளை,நிர்மானிக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தையும இராணுவ தளபதி பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அங்குள்ள 500க்கு அதிகமான இராணுவத்தினர்களுக்கு உறையை நிகழ்த்தினார்.

இந்த தொழிற்சாலையை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தற்பொழுது இராணுவத்தில் 85 வீதம் சிறுடைகள் விநியோகித்து வருவதாகவும் எதிர்காலத்தில் இதனை 100 வீதத்திற்கு உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இராணுவ தளபதியின் உறையின் போது நிகழ்த்தினார்.

தொழிற்சாலையினுள் அமைத்து வரும் நீச்சல் தடாகத்தை செப்டம்பர் மாதத்தினுள் நிர்மானித்து முடிக்கும்படி ரணவிரு எபரல் கட்டளை அதிகாரிக்கு இராணுவ தளபதி பணிப்புரை விடுத்தார். அதனை தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் கடமை புரியும் படை வீரர்களுடன் அவர்களது நலன்புரி தொடர்பாகவும் உறையாற்றினார்.

இங்கு இராணுவ தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது அதனை தொடர்ந்து பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் இராணுவ தளபதி யையொப்பமிட்டார். பின்பு அங்கு கடமை புரியும் பொறியியலாளர் சேவை படை வீரர்களுடன் இந்த வளாக நிர்மான பணிகள் தொடர்பாகவும் இந்த பணிகளை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று இராணுவ தளபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கான பயிற்சிகள் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் எச்.ஐ.கே பெர்ணாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்டு ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஜெனரல் எல்.எச் டி சில்வா அவர்களது ஆசிர்வாதத்துடன் 1993ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யக்கல ரணவிரு எபரல் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி செல்வந்தர் டேவிட் மேரிக் பீரிஸ் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

|