வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் இராணுவ தளபதியை சந்திப்பு
30th July 2017
இலங்கைக்கான துருகி துாதுவர், பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜூலை மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இராணுவ தளபதியை இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கான துருகி துாதுவர் மதிப்புக்குரிய டன்கா மசுசுதர் அவர்கள் மற்றும் இராணுவ தளபதிக்கு இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புதிய இராணுவ தளபதிக்கு வாழ்த்துக்களை துாதுவர் தெரிவித்தார். அதன் பின்பு இரு நாடுகளுக்கு இடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கான முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பின்பு இராணுவ தளபதியினால் துாதுவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இத்தருணத்தில் துருகி துாதரகத்தின் பிரதி செயலாளர் திருமதி நசான் டென்சி இணைந்திருந்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை மற்றும் மாலைதீவு பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் டொம் பர்ன் மற்றும் அந்த துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (28)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இறுதியில் இராணுவ தளபதியினால் பிரதி உயர் ஸதானிகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹேஷ் (27)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார். பின்பு இராணுவ தளபதி நினைவு பரிசு வழங்கி பாதுகாப்பு ஆலோசகரை கௌரவித்தார்.
|