ரகர் போட்டியில் இலங்கை இராணுவ பொதுசேவை படையணிக்கு வெற்றி
29th July 2017
2017ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கு இடையிலான இறுதி ரகர் போட்டிகள் (28)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இராணுவ ரகர் சங்கத்தின் தலைவர் போர்கருவி மாஸ்டர் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இந்த நிகழ்விற்கு வருகை தந்தார்.
இந்த இறுதி சுற்றுப் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக இலங்கை இராணுவம் மற்றும் பாகிஸ்தான் இராணுவ அணிகளுக்கு இடையிலான நட்புணர்வை மேம்படுத்தும் போட்டி இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் இராணுவ அணி வெற்றியை பெற்றுக் கொண்டது. இவர்கள் (24)ஆம் திகதி திங்கட் கிழமை 17 இராணுவ ரகர் விளையாட்டு வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் பிரிகேடியர் கூலம் ஜிலானி தலைமையில் இலங்கைக்கு வருகை தந்தனர்.
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதி ரகர் போட்டியல் இராணுவ சமிக்ஞை படையணி மற்றும் இராணுவ பொது சேவை படையணி போற்றியிட்டு இராணுவ பொது சேவை படையணி 26-3 புள்ளிகளை பெற்று வெற்றியை பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியாளர்களுக்கு இராணுவ தளபதி வெற்றிக் கிண்ணங்களை வழங்கினார்.
இந்த போட்டியை பார்வையிடுவதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் டொக்டர் சர்ப்ராஷ் அக்மட் காண் சிப்ரா , இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் வருகை தந்தனர்.
|