இராணுவ பாதுகாப்புடன் 15 எரிபொருள் பவுசர்கள் கொலன்னாவையிலிருந்து வெளியேற்றம்

26th July 2017

கனிய எண்ணெய்வள ஊழியர்கள் தற்பொழுது மேற்கொள்ளும் பகிஷ்கரிப்பு வேலை நிறுத்தத்தின் நிமித்தம் பாதிப்படைந்திருக்கும் நிலையை மேம்படுத்துவதற்காக அரசினால் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் குறித்து பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பகிஷ்கரிப்பில் ஈடுபடாது கடமையை புரியும் ஊழியர்களுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.

இலங்கை பொலிஸாரினால் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் இந்த பணிகளில் ஜூலை மாதம் 25ஆம் திகதி இரவு தொடக்கம் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் முதுராஜவெல மற்றும் கொலொன்னாவ எரிபொருள் களஞ்சியசாலை பூமியின் பாதுகாப்பு கடமைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

|