கொழும்பில் நடைபெறவிருக்கும் அமைதி காக்கும் நடவடிக்கை கருத்தரங்கு இலங்கை இராணுவ அமைதி காக்கும் பயிற்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்

25th July 2017

ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி (APPTCCC) மற்றும் ஆசியா பசிபிக் அமைதி காக்கும் பயிற்சி மத்திய நிலையத்தின் (AAPTC)வருடாந்த ஒன்று கூடல் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெறவிருக்கின்றது.

இந்த கருத்தரங்கு இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம், பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளையின் கீழ் பூகோள சமாதான நடவடிக்கை தோற்றத்துடன ஒருங்கிணைந்த கருத்தரங்கு 9வது தடவையாக நடைபெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் வருடம் ‘Challenges of Developing a Robust Peacekeeping Mindset’ எனும் தலைப்பில் பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி (APPTCCC) ஆசியா பசிபிக் வலயம் பிரதிநிதித்துவ படுத்தும் அவுஸ்ரேலியா, பங்களாதேசம், புருமை, காம்போஜய, சீனா, பிரிஜிய, இந்தியா, இந்தோனிசியா, ஜப்பான், மலேசியா, மொங்கோலியா, நேபாளம் ,நியூசிலாந், பாகிஸ்தான், பெபுவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், கொரியா, தாய்லாந், வியட்னாம், இலங்கையான 21 நாடுகளின் பங்களிப்புடன் 50 நபர்களின் பங்களிப்புடன் இலங்கை இராணுவ பயிற்சி பணிப்பாளரின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

பூகோள சமாதான நடவடிக்கை தோற்றம்;(GPOI)>இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம், (IPSOTSL),பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம் (BIPSOT),ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நிறுவனம்;(UNDPKO),OMA, ALCOPAZ, APSTA, EAPTC),எனும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ஆயுதப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வானது 2008 ஆண்டு பங்களதேசத்தில் முதல் முறையாக (BIPSOT)எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசியா பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கையானது பயிற்சியாளர்களின் ஒற்றுமையை மேம் படுத்தும் முகமாக பரிமாற்றம், அறிவு,அனுபவம், ஆராச்சி போன்ற ஐக்கிய நாட்டின் பாடதிட்டங்கள் மற்றும் ஒற்றுமை தொடர்பான வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும்.

பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம், அமெரிக்க பசிபிக் கப்பல்துறை, அமொரிக்கா கடற்படை, இராணுவ பிரதான பதவி நிலை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.டி இசட் விக்கிரமரத்ன, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி. வி ரவிபிரிய இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச்.பி.என்.கே ஜயபதிரன மற்றும் பயிற்சி பாடசாலையின் ஆலோசகர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஆசியா பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரியினால் அடிப்படை ஒழுங்குகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதனை போல் இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி மத்திய நிலையின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசாத் பதிரன அவர்கள் தலைமைத்துவத்தை வகிக்கின்றார்.

|