இராணுவம் புனரமைத்த 11ஆவது குளம் மற்றும் பாதைகள் இராணுவ தளபதியினால் மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக பாரமளிப்பு
25th July 2017
இராணுவ பொறியியலாளர் படையணியினால் கந்தளாய், கந்தளாவ பிரதேசத்தில் புனரமைத்த 11ஆவது குளம் மற்றும் கந்தலாவை நோக்கி செல்லும் 5.4 கிலோமீற்றர் பாதை புனரமைத்த நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் வெள்ளிக் கிழமை 21ஆம் திகதி இடம்பெற்றது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகவின் அழைப்பையேற்று மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர். பின்பு ஜனாதிபதியுடன் பாடசாலை மாணவர்கள் பயிர்கள்; நடும் நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
நாட்டில் உட்கட்ட வசதி அபிவிருத்தி திட்டங்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய சேவையை கௌரவித்து மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் இச்சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ பொறியியலாளர் படைப் பிரிவிற்கு 23 உழவு இயந்திரங்களும், 05 கெப் வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நாட்டில் சிறந்த சேவையை புரியும் இராணுவத்தினர் அரசின் ஐந்தாண்டு திட்டத்திற்கு அமைய 5000 மில்லியன் ரூபாய் செலவில் நாடுபூராக குளம், அனைக்கட்டு, நீர்த்தேக்கங்கள் , 473 மக்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் 100 ஆசிரியர் வீடமைப்புகளை நிர்மானித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் முதலாவது கட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைய இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படை வீரர்கள் இணைந்து ‘நச்சுத்தன்மையற்ற நாடு’ மற்றும் ‘சிரிபுர பிவிசம’ திட்டத்தின் கீழ் கைவிடப்பட்ட குளங்கள், அனைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள், நீர் பாதைகளை புனரமைக்கும் திட்டங்களும் திருகோணமலைக்கு குறுக்காக 250 கிலோமீற்றர் யானை வேலி அமைக்கும் திட்டங்கள் மற்றும் 257 கிலோமீற்றர் கிராமிய பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2021ஆம் ஆண்டில் முடிவடையும் இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு அரசினால் 5000 மில்லியன் ரூபா மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்திற்கு அரசினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் இந்த அவிபிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களி;ன் ஆசிர்வாதத்துடன் 1, 7 மற்றும் 8ஆவது பொறியியலாளர் படையணிகளினால் இந்த அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழ் கிராம அபிவிருத்தி சங்கம், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராமவாசிகள், மத்திய சூழல் அதிகார சபை, மொரட்டுவ கல்கலைக்கழகம் மற்றும் விவசாய அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் எண்ணக்கருவிற்கு அமைய கிராமிய மக்களது பொருளாதார மேம்பாட்டையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் உயர்த்துவதற்காக இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவ பொறியியலாளர் படைப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்னவின் தலைமையில் 78 பாரிய இயந்திரங்களை கொண்டு; 200 பொறியியலாளர் படை வீரர்கள் இந்த பணிகளில் கலந்து கொண்டனர்.
|