இராணுவ ஒத்துழைப்புடன் 100 சக்கர நாற்காலிகள் பகிர்ந்தளிப்பு
25th July 2017
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள 23ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் இரத்தினபுரி மாணிக்க வியாபாரியான பிரியன் புஸ்பகுமாரவினால் மட்டக்களப்பு பிரதேசத்தின் பொது மக்களது தேவைகளின் நிமித்தம் 100 சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பிரிவின் பிரதேச சமூக சேவை அதிகாரிகள்,கிராம உத்தியோகத்தர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கே இரண்டு மில்லியன் ரூபா பெறுமதிமிக்க சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, 23ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டப்ள்யூ.எஸ்.டீ.பீ பனன்வல,இரத்தினபுரி மாணிக்க வியாபாரி பிரியன் புஸ்பகுமார,மதகுருமார்கள்,அரச உயரதிகாரிகள்,கிராமவாசிகள் கலந்துகொண்டனர்.
|