முல்லைத்தீவு போர் நடவடிக்கையின் போது காலஞ் சென்ற படைவீரர்களுக்கான நினைவு தின விழா
25th July 2017
இருபத்தியொரு வருடங்களுக்கு முன்பாக, 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போர் நடவடிக்கையின் போது காலஞ்சென்ற இராணுவத்தினரை நினைவு படுத்தும் முகமாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள 59ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 591ஆவது படைத் தலைமையகத்தினால் இந்த நிகழ்ச்சி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இந்த ஒழுங்குகள் முல்லைத்தீவு நகரை அலங்கரித்து நடாத்ததப்பட்டன. 642, 591, 681 மற்றும் 242 படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 6ஆவது விஜயபாகு காலாட்படை, 9ஆவது சிங்கப் படையினர் இணைந்து இந்த நிகழ்ச்சி ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வானது முல்லைத்தீவு போர் நடவடிக்கையின் போது இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களை நினைவு படுத்தும் முகமா இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
|