இராணுவத்தினரால் விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இரண்டாம் முறையாகவும் நிகழ்த்தி வைப்பு

20th July 2017

இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் விவசாயம் தொடர்பான கல்விசார் பயிற்ச்சிப் பட்டரையானது இரண்டாம் முறையாகவும் விவாசயிகளுக்காக கடந்த திங்கட் கிழமை (17) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வின் கருத்தரங்கானது கந்தகாடு (கிழக்கு) ,மனிக் பாம் (வன்னி),நச்சிக்குடா வெல்லங்குளம்(கிளிநொச்சி),மற்றும் உடயார்கட்டுகுளம்(முல்லைதீவு) போன்ற பிரதேசங்களில் வசிக்கின்ற விவசாயிகளுக்காக நிகழ்தப்பட்டது.

இப் பயிற்சிப் பட்டறை 60 வேலை நாட்கள் உள்ளடங்களாக திங்கட் கிழமை (17); இடம் பெறுவருடன் இவ் வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நிறைவு பெறும்.

இப் பயிற்சிப் பட்டறையானது இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட திறமைசார் இராணுவ அதிகாரிகளினால் இம் மூன்றுமாத கால பயிற்சிப் பட்டறை நிகழ்த்தப்படுகின்றது. இப் பயிற்சிப் பட்டறையின் முடிவில் இதில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றுதழ்களும் வழங்கப்படும்.

இப் பயிற்சிப் பட்டறையானது 125 விவசாய உறுப்பினர்கள் உள்ளடங்களாக தெரிவு செய்யப்பட்ட 25விவசாய குழுக்களின் தலைவர்களுக்கென இராணுவத்தினரால் நிகழ்த்தப்படுவதுடன் இப் பயிற்ச்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு தினமும் தலா 300/-ருபா வீதம் வழங்கப்படுவதுடன் பொதிசெய்யப்பட்ட உணவு மற்றும் குடிபாணங்களும் வழங்கப்பட்டன.

இப் பயிற்சிப் பட்டறைக்கு கிழங்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி வன்னி ,கிளிநொச்சி ,முல்லைதீவு போன்ற இராணுவ தலைமையகங்களின் தளபதிகள் விவசாய திணைக்களத்தின் ஒன்றிணைப்புடன் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

மேலும் இவ்வாறான பயிற்சிப் பட்டறையானது திங்கட் கிழமை (17) திகதி இராணுவ தலைமையகம் இராணுவ படைப் பிரிவு போன்றவற்றிலும் நிகழ்த்தப்பட்டது.

|