இராணுவ விஷேட படையணியின் டைவிங் எலயிட் கம்பட் வாரியஸ் பயிற்சி நிறைவு விழா
20th July 2017
அன்மையில் முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட விஷேட படையணியின் கம்பட் டைவிங் பயிற்சி பாடசாலையினால் (SFCDTS) 38 படையினருக்கு 12 வார காலமாக நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா செவ்வாய்க் கிழமை 18ஆம் திகதி நாயாறு நீர்பரப்பு (SFCDTS) வளாகத்தினுள் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கமாண்டோ படையணியின் படைத் தளபதி மற்றும் 14 படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரால்ப் நுஹேரா கலந்து கொண்டார். இவரை விஷேட படையணியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க வரவேற்று பிரதான டைவிங் அதிகாரியான விஷேட படையணியைச் சேர்ந்த மேஜர் எஸ்.டீ.எல்.ஏ குமாரவின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்பு பயிற்சியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீரர்களுக்கு மூன்று திறமை பதக்கங்களும்,சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த விஷேட படையணியினர் மற்றும் கமாண்டோ படையினர் இணைந்து பயிற்சி கண்காட்சிகளை பார்வையாளர்களுக்கு முன் வைத்தனர்.
1991ஆம் ஆண்டு நடைபெற்ற இயற்கை அனர்த்தத்தின்போது ‘கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் நிலவிய வெள்ளப்பெருக்கின் ஆபத்துக்கு உள்ளான பொது மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் விஷேட படையணியின் நிறுவனர் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாரச்சியினால் விஷேட படையணியினுள் டைவிங் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடதக்க ஒரு விடயமாகும்.
இந்த பயிற்சியில் இரண்டாவது விஷேட படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எல்.எஸ்.ஏ.எஸ் விஜேநாயக திறமையான உடற்பயிற்சி வீரராகவும், 2ஆவது விஷேட படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஆர்.கே.கே ராஜபக்ஷ திறமையான நீச்சல் வீரராகவும், 2ஆவது விஷேட படையணியைச் சேர்ந்த கெப்டன் ஏ.எம்.எல்.கே அத்தநாயக பயிற்சியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருகோணமலை கடற்படை எகடமி மற்றும் இந்தியாவில் பயிற்சி பெற்ற விமானப்படை அங்கத்தவர்கள் உட்பட 65 அதிகாரிகளும் 1006 படைவீரர்களும் இதற்கு முன் நடைபெற்ற பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள்.
இந்த பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பிற்கு கட்டளை அதிகாரியாக மேஜர் எம்.ஏ.ஜே மெனிக்அச்சியும்,இரண்டாவது கட்டளை அதிகாரியாக கெப்டன் வி.ஜி.டீ.பி விதான அவர்களும் தலைமை வகித்தனர்.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி மேஜர் ஜெனரல் ரால்ப் நுஹேரா அவர்களினால் இந் நிகழ்வின் போது சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்பு மரநடுகை நிகழ்வும் பயிற்சியில் கலந்து கொண்ட படையினருடன் குழுப்படங்கள் எடுக்கப்பட்டன.
இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்,பயிற்சி பாடசாலையின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 எஸ். அமரசிங்க உட்பட அதிதிகள் கலந்து கொண்டனர்.
|