மத்தேகொட இராணுவ முகாமில் சூரிய மின்சக்தி இயந்திரம் பொறுத்தப்பட்டது
13th July 2017
மத்தேகொடயில் அமைந்துள்ள 5ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி வளாகத்தினுள் அமைந்துள்ள அதிகாரி விடுதியில் இந்த சூரிய மின்சக்தி இயந்;திரம் செவ்வாய்க் கிழமை (11)ஆம் திகதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினாரல் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சூரிய மின்சக்தி இயந்திரம் தகிமா டாவ் லங்கா (தனியார்) நிறுவனத்தினால் அன்பளிப்பு வழங்கப்பட்டது. இந்த சூரிய மின்சக்தி இயந்திரத்தில் 12 வோல்ட் மின்சாரத்தை பெறமுடியும்.
இந்த நிகழ்வின் வரவேற்புரை பிரதான பொறியியளாளர் மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தகிமா மாவ் லங்கா (தனியார்) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியினால் இந்த சூரிய மின்சக்தி இயந்திரம் சம்பந்தமான விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னாள் இராணுவ தளபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த சூரியசக்தி இயந்திரம் இந்த படையணிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த படையணி தலைமையக நுழைவாயிலில் அமைந்துள்ள ‘Home of Sappers’ அறிவிப்பு பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க , பிரதான பொறியியலாளர் மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன, தகிமா மாவ் லங்கா (தனியார்) நிறுவனத்தின் தலைவர் கொடாகி மசாடோ, செரன்டிப் கிரின் நிறுவனத்தின் தலைவர் தேசஅபிமானி ஹெட்டியாரச்சி கலந்து கொண்டனர்.
|