புதிய இராணுவத் தளபதியின் முதல் ஊடக சந்திப்பு

5th July 2017

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் சேனாநாயக்க அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக புதன் கிழமை (5) பதவியேற்றதுடன் தமது கருத்துக்களை தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

மேலும் இச் சந்திப்பில் கருத்து தெரிவித்த தளபதி தாம் யுத்த சூழ்நிலையின் எல் டி டி ஈ பயங்கரவாதிகளுடன் போரிட்டு வெற்றிகொண்ட பங்களிப்பினை பற்றி விபரித்ததோடு பிற்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தம்மீது அதீத நம்பிக்கை வைத்து இப் பதவியினை வழங்கியதாகவும் தெரிவித்த அவர் ஊடகவியலாளர்கள் விடுத்த கேள்விக்கு “ஒழுக்கமே எம் இராணுவத்தின் பலம் அதனை நாம் தொடர்ந்தும் வலுப்படுத்த விரும்புகின்ரோம் எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடவியலாளர்களால் விடுக்கப்பட்ட கேள்வியின் போது இராணுவ வீரர்களின் நீதிக்கு புறம்பான செயல்களின் மூலம் இராணுவ படைவீரர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற படைவீரர்கள் என அடையாளம் காணப்படுவதுடன் இதன் நிமித்தம் இராணுவ ஒழுக்கமானது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனை கட்டமைக்க தாம்முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில் இராணுமானது நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றதெனவும் பயங்கரவாதத்தினை ஒழித்து சர்வதேச மற்றும் அவசர சூழ்நிலைகளிலும் தமது பாரிய சேவையினை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த தளபதி “ எனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தாம் ஒருபோதும் அரசியல் விடயங்களில் தலையிடுவதில்லையெனவும் தாம் தமது வாழ்கைப் பயணத்தில் ஒருபோதும் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத எச்சரிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்களால் விடுத்த கேள்விக்கு நாட்டின் முப்படைகள் , பொலிஸ் திணைக்கம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தமது கடமையினை நிகராகச் செய்ய தயாராக உள்ளனர் அந்த வகையில் தற்போதய காலகட்டத்தில் எவ்வித எச்சரிக்கைகளும் எமது அவதானத்திற்கு கொண்டு வரப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த தளபதி தாம் இராணுவத் தளபதியாக இராணுவத்தினை முன்னேற்ற பாதைக்கு வழிநடத்த விரும்புவதாகவும் இராணுவ வீரர்களது பிரச்சினைக்கும் தீர்வினை வழங்கவுள்ளதாக தெரிவித்ததுடன் தமது எதிர்கால சேவைக்கு அவசியமான ஒத்துழைப்பினை தமது திணைக்களத்திற்கும் நாட்டிற்கும் வழங்குமாறு தெரிவித்தார்.

|