533 வது காலாட் பிரிகேடினால் மாற்றுத் திறனாளி குடும்ப உறுப்பினருக்கு ஆதரவு

28th July 2024

கித்துல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள குடும்பம் ஒன்றின் கோரிக்கையை அடுத்து இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக மாற்றுத்திறனாளி குடும்பஸ்தர் ஒருவருக்கான கழிவறை வசதி நிர்மாணிக்கப்பட்டது.

படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் 53 வது காலாட் படைப்பிரிவு படையினர் இந்த பணியை மேற்கொண்டனர்.

இந்த வசதி பயனாளிக்கு 18 ஜூலை 2024 அன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, பிரான்சில் உள்ள திருமதி மினோலிமிரெண்டாவின் நிதியுதவியுடன், 5 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் உள்ள இரண்டு பிள்ளைகளுக்கு கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 533 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.