படையினரால் நீர்கொழும்பு வைத்தியசாலை டெங்கு நோயாளர்களுக்கான வாட்டுகள் நிர்மானிப்பு பணிகளில் ஈடுபாடு

2nd July 2017

நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அன்மையில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியவர்கள் டெங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை வாட்டுகளின் தட்டுப்பாடுகளை கருத்திற்கொண்டு இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக் கமைவாக இந் நிர்மானிப்புப் பணிகளை இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்கள் பொறியியளாளர் படையணியினர் இலங்கை தரைப்படை மருத்துவச் சிறப்பணி மற்றும் இலங்கை மின்சார பொறிமுறை எந்திரிகள் படையணியினருக்கு இவ் வைத்தியசாலையில் தற்காலிக நோயாளர்களுக்கான வாட்டுகள் இரண்டை நிர்மானிக்க மற்றும்மருத்துவ உபகரணங்களை வழங்கி வைக்குமாறு கட்டளை விடுத்துள்ளார்.

அந்த வகையில் இராணுவ தரைப்படை மருத்துவச் சிறப்பணியைச் சேர்ந்த 25 மருத்துவ தாதியர் இவ் வைத்தியசாலை நோயர்களுக்கு சேவையாற்றியதுடன் சேலைன் தாங்கிகளும் வழங்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக டெங்கு நோயினை கண்டறிவதற்கான இரத்தப் பரிசோதனை ஆய்வு கூடமும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

|