மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
2nd July 2017
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நீண்ட நாடகளாக பரவியிருந்த டெங்கு விஷேட நிகழ்வு இரண்டாவது தினமான இன்று கொழும்பு, மஹவத்த பிரதேசத்தை உள்ளடக்கி திங்கட் கிழமை (03) திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சிக்கு 40 குழுக்கள் கலந்து கொண்டனர். ஒரு குழுவிற்கு 5 இராணுவ அங்கத்தவர்களும் பொலிஸ் அதிகாரி மற்றும் மக்கள் சுகாதார பரிசோதகர் உள்ளடங்குவார்கள். இதற்கு சமமாக கடுவெலஇ பிலியந்தலை, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கஹதுடுவ பிரதேசங்கள் உள்ளடக்கி இராணுவ அங்கத்தவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை (01) திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் தலைமையில் சுகததாஸ உள்ளரங்க மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கொழும்பு நகர சபையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை (08) திகதி வரை இடம்பெறும்.
|