கதிர்காம கோவியிலில் புதிய சமயலறை மற்றும் படிகள் நிர்மாணிப்பு
12th July 2024
ருஹுணு கதிர்காம மஹா விகாரை பஸ்நாயக்க நிலமே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 12 வது காலாட் படைபிரிவின் தளபதி ஆலயத்திற்கு புதிய சமையலறை வசதியையும், மாணிக்க கங்கையிலிருந்து கோயில் வளாகத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு புதிய படிக்கட்டுகளையும் நிர்மாணிப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்தார்.
12 வது காலாட் படைப்பிரிவு பொறியியல் சேவைகள் படையணி சிப்பாய்கள் 18 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினருடன் இணைந்து நான்கு வாரங்களுக்குள் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க தங்கள் உதவியை வழங்கினர்.