மயிலடி மீன்பிடி துறைமுகம் மற்றும் நிலங்கள் விடுவிக்கப்படும்
1st July 2017
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (3)ஆம் திகதி திங்கட் கிழமை மயிலடி மீன்பிடி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் இடம் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மயிலடி பிரதேசத்தில இடம்பெயர்ந்துள்ள பிரதான குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியிருக்க முடியும்.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஊரணி பிரதேசத்திலுள்ள 35 ஏக்கர் நிலம் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான பிரச்சினையை கவனத்தில் கொண்டு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (7)ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
|