நச்சிக்குடா பிரதேசத்தில் தீயனைப்பு மீட்புப் பணியில் படையினர் ஈடுபாடு
28th June 2017
முலன்காவில் பொலிஸ் பிரிவினரால் நச்சிக்குடா கிளிநொச்சி பிரதேசத்தில் கடையொன்று திடீரென தீப்பற்றியதாக கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய கிளிநொச்சி 65ஆவது படைத் தலைமையகத்தினைச் சேர்ந்த 19ஆவது இலங்கை காலாட்படை, 11ஆவது (தொண்டர்) கஜபா படையணினர் இணைந்து கடந்த திங்கட் கிழமை இரவு வேளை (26) தீயனைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு நிலைமையினை கட்டுப்படுத்தியள்ளனர்.
இரவு வேளை திடீரென பற்றிய இத் தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக கிட்டத்தட்ட 40 இராணுவ வீரர்களின் ஒத்துழைப்பினை வழங்கியதோடு தீயணைப்பு மீட்புப் பணிகள் மிக விரைவாக இடம் பெற்று இப் பிரதேசத்தின் நிலைமையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
கிட்டத்தட்ட 35 நிமிடத்திற்குள் இத் தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதோடு சேதத்திற்குள்ளான கடையின்; உரிமையாளர்கள் தமது உயிரினையும் துச்சமாக மதித்து இத் தீயனைப்புச் சேவையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
|