விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

27th June 2017

இலங்கைக்கான பாகிஸ்தான் துாதரகத்தில் கடமை புரிந்து விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் முகமட் ரஜீல் இர்ஷாட் காண் வெள்ளிக்கிழமை (23) இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களை சந்தித்தார்.

இவ்விருவருக்கும் இடையில் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. பின்பு பாதுகாப்பு ஆலோசகரால் தான் இலங்கையில் சேவையாற்றிய காலப்பகுதிகளில் இலங்கை இராணுவத்தினால் தமக்கு கிடைத்த ஒத்துழைப்பையிட்டு இராணுவ தளபதிக்கு நன்றியை தெரிவித்தார். பின்பு இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு பரிசு பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.

|