மட்டக்களப்பு மாவட்டம் நிலக் கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமாக பிரகடனம்
23rd June 2017
நாட்டில் இதுவரை 12,76,898 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடிகள் அபாயமற்ற பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ நிலக்கண்ணி வெடி அகற்றும் படைப் பிரிவினால் (SLA-HDU) தேசிய, உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து (INGOs/NGOs) மட்டக்களப்பு மாவட்டத்தை நிலக் கண்ணி வெடிகளற்ற பிரதேசமாக அறிவிக்கும் கூட்டம் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இராணுவ நிலக் கண்ணிவெடி அகற்றும் படையினர் (SLA-HDU) நிலக் கண்ணிவெடி அபாயகரமான பிரதேசமாக கண்டுபிடிக்கப்பட்டு 377,026,951 அடி பிரதேசத்தில் 312,111,449 அடி பிரதேசமான 83 வீதம் இராணுவத்தினரால் அகற்றப்பட்டது. எஞ்சிய 17 வீதம் அரச சார்பற்ற நிறுவனங்களான ‘MAG’, ‘Halo Trust’, ‘FSD’, ‘SARVATRA’, ‘Horizon’, ‘DASH’ , ‘SHARP’ இணைந்திருந்தது.
நேற்றைய தினம் நடைபெற்ற இந் நிகழ்விற்கு சிறைச்சாலைகள்,மறுசீரமைப்பு மற்றும் புணர்வாழ்வு புணரமைப்பு அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், மாலைதீவு அமெரிக்க ஐக்கிய நாட்டின் துாதுவர் அதுல் கெசாப், தேசிய நிலக் கண்ணிவெடி மத்திய நிலையத்தின் அதிகாரிகள், இராணுவ தளபதி பிரதிநிதித்துவ படுத்தி அதன்; சார்பாக இராணுவ பொறியியலாளர் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் அமித் செனவிரத்ன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலந்து கொண்டனர்.
தற்போது கண்ணி வெடிகள் மீட்கப்பட்டு அபாயமற்ற பகுதிகளாக பிரகடனப்படுத்திய பிரதேசங்களில் மக்கள் அச்சமின்றி மீளக் குடியேற்ற நடவடிக்கை ஆரம்பிக்கமுடியும்.
மேலும் யுத்த முடிவின் பின்பு இலங்கை இராணுவத்தினர் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் நிலம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பாரியளவில் மேற்கொண்டுள்ளனர்.
|