இராணுவ பதவிநிலை பிரதானி உள்ளடங்களாக இராணுவ முஸ்லீம் அதிகாரிகள் இப்தார் நிகழ்வில் பங்கேற்பு

14th June 2017

இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தளபதியின் சார்பில் (13) ஆம் திகதி வாந்துவ இராணுவ விடுமுறை விடுதியில் இடம் பெற்ற நோன்புப் பெருநாள் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவ முஸ்லீம் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் எம்.எச்.எப் யூசுப் அவர்களின் தலைமையில் இராணுவ முஸ்லீம் அங்கத்தவர்களின் பங்கேற்புடன ;சம்பிரதாயபூர்வமாக இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, இராணுவ பிரதி பதிவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரேணக உடவத்த, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் முஸ்லீம் மத அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துள்ளனர்.

இராணுவத்தினுள் கடமையிலிருக்கும் அனைத்து இராணுவ வீரர்களது சமயம் மற்றும் கலாச்சார உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தருவது இராணுவ தளபதியின் பிரதான நோக்கமாகும்.

|