பாஹியங்கள பிரதேசத்தில் இராணுவத் தளபதி கலந்துரையாடல்

3rd June 2017

இராணுவ படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கபோன்றௌர் அனர்த்தத்தினால் மிக மோசமாக பாதிப்படைந்து காணப்பட்ட பாஹியங்கள பிரதேசத்தில் உள்ள குகுலேகங்க பிரதேசத்தினை பார்வையிட கடந்த வெள்ளிக் கிழமை (02) காலைவேளை சென்றுள்ளனர்.

மேற்படி பாஹியங்கள பிரதேசமானது களுத்தரை மாவட்டத்தில் அமைந்துள்ள வீடுகள் கடந்த ஒரு கிழமைக்குள் அதிகளவிலான மண் சரிவு மற்றும் வெள்ள பெருக்கு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு காணப்பட்டன.

மேலும் இப் பிரதேசத்தினை நிலைமையினை கண்காணிக்கச் சென்ற இராணுவத் தளபதி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படைவீரர்கள் மற்றும் தற்காலிக நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் கலந்துரையாடியதுடன் அப் பிரதேசத்தின் அன்மையில் அமைந்துள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அவ் விகாரைக்குச் சென்று அங்குள்ள மக்களிடமும் கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளார்.

|