காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோரின் பாடசாலை பிள்ளைகள் இராணுவத்தினால் மகிழ்விப்பு

19th March 2024

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.ஜே. காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 மார்ச் 16 ஆம் திகதி இரத்மலானை காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோரின் பாடசாலை பிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியை இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் படையினர் நடாத்தினர்.

இரத்மலானை, இலங்கை காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான பாடசாலை மாணவர்களின் மன திடத்தை வளர்ப்பதன் நோக்கமாக மதிய உணவுடன், நடன நிகழ்ச்சியையும் நடாத்தினர். பரிசளிப்புடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

இந்நிகழ்ச்சியில் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.