இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

26th May 2017

ஊடக அறிக்கை

அடை மழை காரணத்தினால் 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை மீட்கும் பணிகளில் அனர்த்த மத்திய நிலையத்தினால் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து இந்த பணிகள் ஆரம்பமானது.

முப்படையினரும் இணைந்து வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மாலை பாஹியன்கல, பாலிந்தநுவர, புளத்சிங்கள,கலவான ,வெல்லம்பிடிய, பாதுக்க, நெழுவ, மொரவக, கம்புறுபிடிய, வீரகெடிய,பெலியத்த, தெய்யன்தர, தவலம, முலடியன, வலஸ்முல்ல, இரத்தினபுரி, எல்லாவல, பரகடுவ, பதுவத்த, பிடகந்த,தெஹியோவிட வீதி, அரங்கொடகந்த, எஹெலியஹொட பிரதேசத்தில் அனர்த்த உதவி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் முழுமையாக மூடப்பட்டு தவிக்கும் பாஹியன்கல, பதுரலிய பிரதேச மக்களை மீட்கும் பணிகளில் இராணுவ கொமாண்டோ படையணி உட்பட 1000 இராணுவ படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற் படையினரது படகு சேவை மற்றும் விமானப் படையினரது ஹெலிகொப்டர் சேவைகளும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான எஹெலியஹொட அரங்கொட மலைப் பிரதேசத்தில், பதுவத்த, பிடகந்த பிரதேசத்தில் 2000 ற்கு மேலான இராணுவத்தினர் அனர்த்த மத்திய நிலையத்தின் கட்டளைக்கு அமைய மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். (முடிவு)

|