வறிய குடும்ப பெண்ணிற்கு இராணுவ தளபதியினால் உதவி

23rd May 2017

மிஹிந்தலை சிவகுளம் பிரதேசத்தில் வசிக்கும் வறிய கிராமிய பெண்ணினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வள பணிப்பகத்தினால் 75,000 ரூபாய் பெறுமதியுள்ள பசு மற்றும் கன்று குட்டியும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த பெண்ணிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கால் நடை பணிப்பாளர் கேர்ணல் ஏ.கே.ஏ.பீ குணரத்னவின் தலைமையில் கண்டைக்காடு மற்றும் மெனிக்பாம் இராணுவ விவசாய பன்னை அதிகாரிகள் சிவகுளம் பிரதேசத்திற்கு வருகை தந்து பசு மற்றும் கன்றுகுட்டியை இந்த வறிய பெண்ணிற்கு அன்பளிப்பு செய்தார்கள். அத்துடன் 6 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியினரால் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியும் இந்த பெண்ணிற்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இராணுவ மெனிக்பாம், கண்டைக்காடு விவசாய பண்ணை மற்றும் 6 ஆவது இலங்கை காலாட் படையின் கட்டளை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

|