தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு
22nd May 2017
தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் வகையில் 19 ஆம் திகதியான இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவு துாபி வளாகத்தினுள் இடம்பெற்றது.
முப்பது தசாப்தங்களாக நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டிற்கு நிரந்தர சமாதானத்தை பெற்றுத் தந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரை கௌரவித்து ஒவ்வொரு வருடமும் 19 ஆம் திகதி இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன் ரணவிருசேவா அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வரவேற்புரையை ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமோ பொன்சேகா அம்மையார் ஆற்றினார். அதனை தொடர்ந்து அனைத்து மதகுருதலைவர்களது ஆசிர்வாதத்துடன் தேசியகீதம் இசைத்து பின்பு பிரதம விருந்தினரான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் படைவீரர்களை கௌரவித்து சிறப்பான உறையை ஆற்றினார். அதன் பின்பு இந்த ரணவிரு நினைவு துாபிகளுக்கு அருகாமையில் ரணபெர இசை நிகழ்வு இடம்பெற்றது. பின்பு அதிதிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரது குடும்ப உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தி கௌரவமளித்தார்கள்.
இந்த நிகழ்விற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், பீல்ட் மார்ஷல், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு இராஜாங்க செயலாளர், மேல் மாகாண ஆளுனர், மற்றும் அமைச்சர்கள், முப்படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர், அரச மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
|