இராணுவ படையினரால் 10 நாட்களுக்குள் டெங்கு வாட்டு நிர்மானிக்கப்படவுள்ளது
18th May 2017
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைவாக 3மாத காலமாக நடாத்தப்பட்ட டெங்கு ஒளிப்பு திட்டத்திற்கமைவாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையின் கீழ் இராணுவப் படைப்பிரிவினரால் கலுபோவில போதனா வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு நோயர்களுக்கென இரண்டு வாட்டுகள் நிர்மாணிக்கும் கட்டுமானப் பணித் திட்டமானது கடந்த (18) திகதியன்று காலை வேளையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பொறியியளார் படையணியின் படைத் தளபதி பரிகேடியர் அமித் செனவிரத்ன மற்றும் முதன்மை கள கட்டுமான பொறியியளார் மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 5ஆவது இலங்கை பொறியியாளர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 1ஆவது பொறியியளாளர் சேவை தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள் பங்கேற்றதோடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தினைச் சேர்ந்த படைவீரர்கள் இக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.
மேலும் இவ் டெங்;கு ஒளிப்பு திட்டமானது வைத்தியசாலைகளில் நிலவுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினை கருத்திற் கொண்டு கிட்டத்தட்ட 10 நாட்களிற்குள் இவ் வைத்தியசாலை வளாகத்திற்குள் இரண்டு வாட்டுகள் வீதம் நிர்மாணிக்கும் திட்டத்தின் பணிகள் நடைமுறைப் படுத்தப்பட்டதோடு இந்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய அதிகாரிகள் தெற்கு சாலைப் போக்குவரத்து அமைச்சர் கௌரவமிக்க லசந்த அலகியவன்ன முன்னய அமைச்சர் பீலிக்ஸ் பெரெரா உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|