முதல் தடவையாக புதுடில்லி தலை நகரத்தில் இலங்கை இராணுவத்தின் அலங்கார தோரணங்கள்
15th May 2017
இலங்கை இந்தியாவிற்கு இடையில் உள்ள நெருங்கிய உறவை மேண்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை துாதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியினால் வெசாக் தினத்தை முன்னிட்டு புதுடில்லி தலைநகரத்தில் முதல் தடவையாக அலங்கரிக்கப்பட்ட வெசாக் தோரணம் மற்றும் இருநுாற்றிற்கு அதிகமான வெசாக் கூடுகள் 15 ஆம் திகதி கண்காட்சியிடப்படும்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் வழிக் காட்டலின் கீழ் இராணுவ அதிகாரி உட்பட 15 இராணுவ வீரர்கள் மே மாதம் இரண்டாம் திகதி இந்தியா புதுடில்லிக்கு பயணித்துள்ளதுடன் இலங்கை கடற்படையினரால் இதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதுடில்லியின் மத்தியில் நாற்பது அடி உயரத்தில் 15000 மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த அலங்கார தோரணத்தில் அங்குலிமாலாவின் வரலாறு உள்ளடக்கப்பட்ட காட்சிகளும் ஹிந்தி மொழிகளில் விபரங்கள் மொழி பெயர்க்கப்பட்டும் இந்த நிகழ்வு இடம்பெறும். இந்த அலங்கார தோரணங்கள் மே மாதம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை. ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 21 ஆம் திகதி வரை கண்காட்சியிடப்படும்.
இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை துாதரகத்தின் ஊடக அறிக்கைக்கு அமைய கல்வி அமைச்சர் கெவரவத்திற்குரிய அகிலவிராஜ் காரியவஷம் மற்றும் இந்தியா குடியியல் அரச அமைச்சர் கௌரவத்திற்குரிய கிரன் ரிஜ்யூ அவர்களினால் இன்றைய தினம் (15) ஆம் திகதி மாலை திறந்து வைக்கப்படும். இந்த நிகழ்விற்கு புதுடில்லி நகராட்சி மன்றம் உட்பட இந்திய அரச நிறுவனங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
|