இராணுவ இணையதளம் தமிழ் மொழியில் வெளியிடுதல்
15th May 2017
உலக தமிழ் இணையத்தள பார்வையாளர்களின் நன்மை கருதி இலங்கை இராணுவம் உத்தியோக பூர்வமாக தமிழ் இணையத்தள ‘www.army.lk’ பக்கத்தினை இன்றைய தினம் (15) ஆம் திகதி காலை திறந்து வைத்தது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இனங்களுக்கு இடையிலான நல்லினக்கத்தை மேண்படுத்தும் நோக்கத்துடன் இந்த வெளியீடு இராணுவ ஊடக பணிப்பகம் மற்றும் இராணுவ தகவல் தொழில் நுட்ப பணிப்பகம் இணைந்து திறந்து வைத்தது.
இராணுவ ஊடக பணிப்பாளரினால் உத்தியோக பூர்வமாக தமிழ் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது கேர்ணல் ஊடக பதவியை வகிக்கும் எம்.பி லமாஹேவா, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
|