541 வது காலாட் பிரிகேட் படையினரால் கல்லடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு தடுப்பு பணி

4th December 2023

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் முயற்சியாக 541 வது பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு தடுப்பு பணி புதன்கிழமை (22 நவம்பர் 2023) அன்று மேற்கொள்ளப்பட்டது.

541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிவைசி பெர்னாண்டோ ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கமைய படையினர் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிய உணவுடன் பாடசாலை உபகரணங்களையும் வழங்கினர்.

541 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, கட்டளைப் படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வின் ஒருங்கிணைப்புக்கு பங்களித்தனர்.