இராணுவ வைத்தியசாலைக்கு சிங்கப்பூர் இனத்தவரினால் ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் பரிசளிப்பு
15th May 2017
சிங்கப்பூர் மகா கருண பௌத்த அமையத்தினால் இராணுவ வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய நன்கொடையினை சிங்கப்பூரில் வசிக்கும் வணக்கத்துக்குரிய கலாநிதி கர வேடயன குணரத்ன தேரர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களிடம் வைபவ ரீதியாக கையளித்தார் இந்த நிகழ்வின் போது இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களும் கலந்து கொண்டார்.
சர்வதேச வெசக் தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற இந்த நிகழ்வில் சிங்கப்பூர் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மருத்துவ உபகரணங்கள் வணக்கத்துக்குரிய கலாநிதி கரவேடயன குணரத்ன தேரர் அவர்களினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது 10 விஷேட வைத்தியசாலை படுக்கைகள், 20 சக்கர நாற்காலிகள், 15 சேலைன் நிறுத்திகள், 5 நடத்தல் உபகரணம் மற்றும் 5 உறிஞ்சல் இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்திற்கு இராணுவ அதிகாரிகள்இ பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரிஇ மகா கருண பௌத்த அமையத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
|