24 வது காலாட் படைப்பிரிவினரால் பாடசாலை கட்டிடங்களுக்கு வர்ண பூச்சு
13th November 2023
பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளின் காரணமாக அம்பாறை வந்தினகல வித்தியாலயத்தில் வர்ணம் பூசூம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு நலன் விரும்பிகள் மற்றும் அனுசரனையாளர்களினால் ரூபா 3.5 லட்சத்திற்கு தேவையான வர்ணங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றதுடன் பாடசாலையின் சகல கட்டிடங்களும் திருத்தப்பட்டன.
14 வது இலங்கை சிங்க படையணி, 18 வது விஜயபாகு காலாட் படையணி, 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி, 8, 11 மற்றும் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் பொறியியல் சேவை படையணியின் படையினரால் இரண்டு நாட்களுக்குள் (நவம்பர் 4 - 5) அனைத்து கட்டிடங்களுக்கும் முழுமையாக வர்ணம் பூசப்பட்டதுடன் மேலும் பாடசாலையின் உட்கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதங்களும் சரிசெய்யப்பட்டன.
இந்த தொலைதூரப் பாடசாலையில் பெறும்பாலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தங்கி கற்கின்றனர். அதிபரினால் 24 வது காலாட் படைப்பிரிவிற்கு கோரிக்கை விடுக்கையில் பாடசாலை பெருமளவில் பாதிப்டைந்திருந்தது.
மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அந்த இரண்டு நாட்களில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்புக்காக படையினருடன் இணைந்து கொண்டனர்.