24 வது காலாட் படைப்பிரிவினர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு உதவி

2nd November 2023

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவினர் 4 ஆண்டுகளுக்குப் பின்னரான புதன்கிழமை (நவம்பர் 1) அம்பாறை விழாவாடி விநாயகர் கோவிலில் கும்பாபிசேக விழாவை நடத்துவதற்கு ஆலய குருக்களுக்கு உதவிகளை வழங்கினர்.

விழாவாடி விநாயகர் கோவில் சுமார் 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கைவிட்டிருந்தது.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களிடம் புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டதுடன், 24 வது காலாட் படைப்பிரிவினர் கோவில் திருவிழாவை நடத்துவதற்கு தங்கள் உதவியை வழங்கினர்.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆகியோர் கும்பாவிஷேட விழாவில் கலந்து கொண்டனர்.