வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் வடக்கில் 2வது தெங்கு முக்கோண வலயத்தை ஆரம்பித்துள்ளது

16th October 2023

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் வடக்கில் இரண்டாவது 'தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்க உத்தேசித்துள்ள நிலையில் வன்னியில் 100,000 தெஙன்னம் பிள்ளைகளை நடும் பாரிய திட்டத்தினை 'தெரன' ஊடக வலையமைப்பு தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் ட்ரோபிகோயர் லங்கா (பிரைவேட்) தனியார் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வியாழக்கிழமை (12 ஓக்டோபர்) வவுனியா பாம்பைமடுவில் ஆரம்பித்து.

இத்திட்டமானது அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி 11,500 தென்னம் பிள்ளைகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஆரம்ப நிகழ்வை பாம்பைமடுவில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ,அவர்கள் நன்கொடை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து முன்னெடுத்தார்.

இந்த திட்டம் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றதுடன், இதே சந்தர்ப்பத்தில் தெங்கின் பெறுமதி தொடர்பான விசேட விரிவுரை ஒன்றும் டிராபிகொயர் லங்கா தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டது. இந்த விநியோக நிகழ்வானது 56 வது காலாட் பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜி.பீ.எம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 562 வது காலாட் பிரிகேட் தளபதி டி.எம்.எஸ்ஜே தென்னகோன் ஆர்எஸ்பீ அறிவுறுத்தல்களுக்கமைய 562 வது காலாட் பிரிகேட் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னார், வவுனியா மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய அனைத்துப் படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படும். 21 வது காலாட்படை பிரிவு அனுராதபுரம் மாவட்டத்தையும், 54 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 56 காலாட் படைப்பிரிவுகள் முறையே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களையும் உள்ளடக்கும்.

பாம்பைமடுவில் இடம்பெற்ற இந்த விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் திரு பீஎ சரத்சந்திர கலந்து கொண்டனர். வடமத்திய முன்னரங்க பராமரிப்புப் பகுதி தளபதி மேஜர் ஜெனரல் ஏ.கே.ராஜபக்ஷ ஆர்.எஸ்.பீ, படைப பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் ,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், டிராபிகொயர் லங்கா தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.தரிந்து துனுவில, அனுராதபுர மக்கள் வங்கியின் முகாமையாளர் திரு.தனவால விதான, 'மனுசத் தெரண' பிரதி முகாமையாளர் எச்.எம்.ஹர்ஷன சதுரங்க, ஏனைய சிப்பாய்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வடக்கில் முதலாவது ‘தெங்கு முக்கோணம்’ முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டதுடன் வன்னிப் பிரதேசத்தில் வடக்கில் இரண்டாவதாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.