61 வது காலாட் படைப்பிரிவு படையினர் மாத்தறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி
12th October 2023
மாத்தறை மாவட்டத்தில் 61 வது காலாட் படைப்பிரிவின் 1 வது இலங்கை மருத்துவப் படையணியின் மருத்துவக் குழுவினர் மாத்தறை மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளைத் முன்னெடுத்துள்ளனர். வெல்லத்தோட்ட கிராம சேவகர் பிரிவின் உடுவ, கொட்டவத்தையில் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கும், கலபொடவில் 400 குடும்பங்களுக்கும், அத்துடாவ கிராம சேவகர் பிரிவின் 270 குடும்பங்கள் மற்றும் தலுகொடவில் 320 குடும்பங்களுக்கும் நாரங்கல, பஹலவிட்டியல மற்றும் கராகொட பகுதிகளில் வசிக்கும் 270 குடும்பங்களுக்கும் 2023 ஒக்டோபர் 10-11 ம் திகதிகளில் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.
இதேவேளை, 61 வது காலாட் படைப்பிரிவின் படையினருடன் 9 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் இணைந்து அத்துடாவ, நரிதுவ மற்றும் நைம்பலா பகுதிகளில் படகுகள் மற்றும் இராணுவ வாகனங்கள் மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கி வெள்ள நிவாரணப் பணிகளைத் மேற்கொண்டனர்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் அந்தந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை நேரில் பார்வையிட்டதுடன் மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டார்.