வெடிகுண்டுகளை அகற்றும் பணிகளில் மோப்ப நாய் சய்ரா
3rd May 2017
சய்ரா யன்கிஎனும் ஜேர்மன் செப்பட் மோப்ப நாயானது கிட்டத்தட்ட 6 வருடங்களாக வடக்கின் இராணுவ பொறியியலாளர் படைத்தளத்தில் போர் சூழலின் போது பாதுகாப்பற்ற 62இ 680 மீட்டர் உள்ளடக்கப்பட்ட நிலப்பரப்பை நிகரான முறையில் தனது மோப்ப சக்தியின் திறமையினால் வெடிகுண்டுகளை கண்டறியூம் பணியினை திறம்பட செய்துள்ளது.
மேலும் இந் நாயானது இலங்;கை இராணுவ எந்திரிகள் படையினருக்கு உரித்துடைய நாயாக காணப்படும் பட்டசத்தில் இந்த நாயினை இராணுவ வீரர் கோப்பிரல் டி என் ராஜபக்ச என்பவர் பராமரித்து வந்துள்ளதுடன் மேற்படி நாயானது மன்துவில் ஆனந்த புரம் போன்ற மேலும் பல பிரதேசங்களில் பணிபுரிந்துள்ளதுடன் கன்னி வெடிகுண்டுகள் 16 கை குண்டு மற்றும் செயலிக்கப்பட்ட வெடிகுண்டுகள் 01 மற்றும் ஏனைய வெடிகுண்டுகள் 05 போன்றன கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இந்த நாயானது மத்தேகொடைப் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள சிரேஸ்ட பொறியியலாளர் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களினால் அமெரிக்க மார்சல் லியஸ்ரீ எனும் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான கிம்லன் மக்லன் அம்மனி அவர்களிடம் மேற்படி நாயானது சட்டமுறைப்படி கையளிக்கப்பட்டது.
2009 ஆம் வருடம் யூ+லை மாதம் 05ஆம் திகதி பிறந்த இந்த நாயானது 2011 ஆம் வருடம் யூ+லை மாதம் 24ஆம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. 2011 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி வழங்கப்பட்ட பயிற்சியின் பிற்பாடு மேற்படி நாயானது வெடிகுண்டு செயலிளக்கும் படையணியில் சேர்துக்கொள்ளப்பட்டது.
மேலும் மார்சல் லியஸ்ரீ திணைக்களத்தினர் இந் நாயினை இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு இந்த நிகழ்வில்மேஜர் ஜெனரல் தனன்ஜித் கருணாரத்ன அவர்கள் மற்றும் பொறியியலாளர் படைத்தளபதி பிரிகேடியர் எஸ் ஜே எம் ஏ ஆர் செனவிரத்ன உள்ளடங்களான இராணுவத்தினரின் ஒத்துழைப்பிற்கு இவ் அம்மணி அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் மேற்படி நாயானது கடந்த (02)வியாழக்கிழமையன்று அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆதனைத் தொடர்ந்து மேற்படி நாயானது 2016ஆம் ஆண்டு வெடிகுண்டு கண்டுபிடித்தலிற்கான சிறந்த விருதினைப் பெற்றுள்ளுத என்புத குறிப்பிடதக்கக விடயமாகும.
|