7 வது கெமுனு ஹேவா படையணி தின கொண்டாட்டம்
20th September 2023
23 வது காலாட் படைபிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் 7 வது கெமுனு ஹேவா படையணியின் படையலகு தின நாளை முன்னிட்டு, (செப்.16) மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளியில் அமைந்துள்ள திலகவதியார் பெண்கள் இல்லத்தில், படையினர் வசதியற்ற சிறார்களுக்கு விசேட மதிய உணவு விருந்தினை சனிக்கிழமை ஏற்பாடு செய்தனர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி மற்றும் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மதிய உணவு உபசரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஎஸ்பீ பொத்துப்பிட்டிய யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களினால் அப்பகுதியில் உள்ள நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்து இத் திட்டத்திற்கு ஆதரவளித்தார்.
திலகவதியார் பெண்கள் இல்லத்தின் 25 பிள்ளைகளும் 10 பணியாளர்களும் இந் நாளில் உணவை உண்டு மகிழ்ந்தனர்.
233 வது காலாட் பிரிகேட் தளபதி, 7 வது கெமுனு ஹேவா படையணியின் உபகரண பொறுப்பதிகாரி மேஜர் எம்பீ ஹெட்டியாராச்சி, கெப்டன் டபிள்யுஏடி விஜேமான்ன, 2 அதிகாரிகள் மற்றும் 10 சிப்பாய்களும் இந்நிகழ்ச்சியில் இணைந்து கொண்டனர்.