'தீகவாப்பிய' 2ம் கட்ட மறுசீரமைப்பின் ஆரம்பத்திற்கான 'பிரித்' ஓதுதல்
14th July 2023
அம்பாறை ‘தீகவாப்பிய’ தூபியின் புனரமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மேலும் ஆசீர்வதிக்கும் நோக்கில் 2 ஆம் கட்ட ஆரம்ப நிகழ்வின் ‘பிரித்’ ஓதுதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) இரவு முதல் திங்கட்கிழமை (10) மாலை இடம் பெற்றது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகா சங்கத்தினருக்கு சம்பிரதாய முறைகளுக்கமைய தாம்பூலம் வழங்கி ஆசீர்வாதங்களை பெற்றார்.
22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்களுடன் ‘தீகவாப்பிய’ விகாரதிபதி வண. மஹாஓய சோபித தேரர் அவர்களும் கலந்துகொண்டார்.